Grill Party

நிகழ்வு தேதி: Mon, 15 Jun 2026

அன்பான நிட்வால்டன் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

நிட்வால்டன் தமிழர் ஒன்றியத்தின் சார்பில் ஒரு Grill Party நிகழ்வை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இந்நிகழ்வை அனைவருக்கும் ஏற்ற வகையில் நடத்துவதற்காக, கீழே குறிப்பிடப்பட்டுள்ள திகதிகளில் தங்களுக்கு வசதியான திகதியை தெரிவித்து உங்கள் விருப்பத்தை அறியத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

📅 திகதிகள்

☐ 05.07.2026 (ஞாயிற்றுக்கிழமை)
☐ 12.07.2026 (ஞாயிற்றுக்கிழமை)
☐ 19.07.2026 (ஞாயிற்றுக்கிழமை)
☐ 26.07.2026 (ஞாயிற்றுக்கிழமை)
☐ 02.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

🕛 நேரம்

மதியம்

📍 இடம்

Stansstad Bahnhof பின்புறம் அமைந்துள்ள Grill Platz

மேற்கண்ட திகதிகளில் தங்களுக்கு ஏற்ற திகதியை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அதிகமானோர் விரும்பும் திகதியே இறுதியாகத் தெரிவு செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.

அத்துடன், தங்களின் வருகையையும் முன்கூட்டியே உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இது தேவையான ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ள உதவும்.

🔥 உணவு தொடர்பான அறிவிப்பு

விருப்பமுள்ளவர்கள் நெருப்பில் சுட்டு சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களை கொண்டு வரலாம். எனினும், உணவு வீணாவதைத் தவிர்க்க, தாங்கள் கொண்டு வர விரும்பும் பொருட்களை முன்கூட்டியே ஒன்றிய நிர்வாகிகளுக்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

🌿 வாருங்கள் அன்பானவர்களே!
அனைவரும் ஒன்றுகூடி, இனிய நேரங்களைப் பகிர்ந்து மகிழ்வோம்.

உங்கள் அனைவரின் பங்களிப்பையும், வருகையையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

நன்றி.

இப்படிக்கு,
நிர்வாகம்
நிட்வால்டன் தமிழர் ஒன்றியம்

🏠 Home